வியாழன், 9 டிசம்பர், 2010

என் செல்லம்மா


என் காதலி 
காதல் என்பேன்
உன் காதல் மரணிக்கும் என்பாய்
நட்பு என்பாய்..... ஏனேன்பேன்
ஒருதலைகாதல் உண்டு
ஒருதலைதோழமை இல்லைஎன்பாய்...... 
தோழமைக்காதல் தத்து கொள்வாய்......



                                                                                      கவிதை



                                                
கவிதையென்பேன் 
பொய் என்பாய்....
உன்னை பற்றியென்பேன்...
என் தமிழ் அழகு என்பாய் ....
என்னைவிட அழகாய் கவி புனைவாய்....

                                                          பிழை
                                             

நான் கூட்டல் என்றால் 
நீ கழித்தல் என்பாய் 
நான் நேர்மறை என்றால் 
நீ எதிர்மறை என்பாய் 
நான் காதல் என்றால் 
நீ நட்பு என்பாய்
பிழைகளனைத்தையும்
தன் வசமாக்கி 
என்னை ஆட்கொள்வாய்

                                                     நீ எனக்கு வேண்டுமடி....
           
                                                 

நீ எனக்கு வேண்டுமடி....
ஏன் பின் தொடர
ஊடல்கொள்ள...
இலக்கணம் பேச 
காதல் கதம்பம் காண 
கவிதை புனய 
ஏன் பிழை திருத்த
களவியல் தோழமைகாண 
என் மழலை உன் மடி காண 
பெற்ற மழலையை பேன
கொஞ்சுதமிழ் கற்றுத்தர
நித்திரை பொழுது 
தலைவருட 
என்னை போல் சிந்திக்க 
என்னை நிந்திக்க 
ஏன் பயணம் முழுவதும் 
வேண்டுமடி நீ எனக்கு....


                                                                தந்தை 
.  

காதலிக்கிறேன் என்றேன்
ஆள்காட்டி விரலை உயர்தினாய்
யாரென்றேன் 
தந்தை என்றாய்
என்னுடன் பகுத்தறிவு பகல்வாய் 
தந்தை நலன் பேன 
சிவகாருண்யம் கேட்பாய் 
புரியவில்லையடி உன் 
முரண்பாடு 
நீ என் பலமா, பலவினமா
நீ என் காதலி யா 
அல்லது  தோழியா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக