புதன், 29 ஜூன், 2011

ஏன் அவள


ஆளை   மயக்கும் மாலை பொழுதினில் 
ஆதவன் மேற்க்கே விதைக்க படும் வேளையில்
கருத்த மேகங்களுக்கு பின்
சிவந்த வானத்தின் 
அழகை வியந்த வண்ணமிருந்தேன்..
அடுத்த நொடிக்கான
ஆச்சர்யங்கள் என்னை
சூழபோவதை உணராமல்..     

கந்த விழி பார்வை 
என்னை ஆட்கொள்வதாய்
உணர்வு மேலிட
என் பார்வையை
இடம்மாற்றி நகர்த்தினேன் 

என் அருகே நீ இருந்தாய்
நம் பார்வைகளிரண்டும் 
உரசுகையில்
உதடுகள் மௌன தவம் கொண்டன..

இருவருக்குமிடையே யான
வேதி விழி பரி மற்றதினுடே 
ஒரு மழலை கண்டேன்
யாதென்று வினவிய பொது 
காதலென்று பெயரிட்டு
வளர்ப்பெனேன்றாய்...

உன்னை மாற்ற நானும்
என்னை மாற்ற நியும் விளையும்கால்
ஒன்று உணர்தேன்
இருவரும் நம் மழலை வளர்க்கவே
முற்படுகிறோம் என்பதை..

வளர்ந்த குழந்தை
கேட்டது
என்னவள் என்னவள்
என்கிறாய் ஏன் அவள்?என்று 
திகைத்து உனை நோக்கினால்
கேட்டது மழலையல்ல
நீ என உணர்த்தேன்..

கருத்தை ஒத்தவர்கள் 
பேச்சில் மௌனமே 
மொழியாகும்...
கருத்து வேருபாடுள்ளவரின்
ஊடலில் கருத்துக்கள் 
சிதரிக்கிடைக்கபெரும் என்றேன்,
இருப்பினும் கண்கொள்ளா
வேட்கையாய் எனை பார்த்து
எப்படி விழிகள் மட்டும் மோது கின்ற போது
காதல் பிறக்குமென்றாய்..
காதலுக்கு தான் கண் இல்லை 
காதலர்க்கு உண்டு...
உன் விழியினுடே
என் விழி பாய்ச்சினால் 
உன் இதயம் காண
நேருமென்றேன்..

பிதற்றல் என்பாய்
ஆம் உனக்கானது என்றேன் 
இப்படி ஆயிரம் வினாக்கள்
தொடுத்த உன்னால்
எனை பிரியும் போது
மௌனித்திருந்தாய்
என் வினவிர்க்காய் 

ஏதும் சொல்லவில்லை
என் உதடும்,விழியும் மௌனித்திருக்க,
மழை பொழியும் இதயம் 
இதயம் மட்டும்  கேட்டது..
ஏன் அவள்...


இப்படி என்று..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக